St.John's College Online Payment

Department of Tamil (Aided)

About

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாழ்ந்த மூத்த தமிழ்க்குடி’ என்னும் தொன்மைச் சிறப்பினைப் போன்றே தமிழ் மொழிப் பாடமும் கல்லூரியில் முதன்மை இடம்பெற்றிருந்தது தனிச்சிறப்பு. மேலைநாட்டு இறைப்பணியாளர்கள் உயரிய நோக்கமுடையவர்களாக இருந்தபடியால் அவர்கள் அறிமுகப்படுத்திய கல்வியில் ((Anglo-Vernacular)) பிராந்திய மொழியும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பிராந்திய மொழி என்ற அடையாளம் மட்டுமல்லாது பக்தியின் மொழியாக, உயர்தனிச் செம்மொழிக்கு தகுதியான மொழியாக இருந்ததும் மற்றொரு சிறப்புக் காரணமாகும். ஆகவேதான் மேலைநாட்டு இறைப்பணியாளர்களும் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் அவர்தம் புதல்வர்களும் இக்கல்லூரியில் செந்தமிழ்க் கரும்பினை சுவைத்து மகிழ்ந்தனர். இறையியல், தர்க்கம், உளவியல், மலையாளம் முதலிய பாடங்களை விருப்பப் பாடங்களாக தன்னகத்தே கொண்டு கணிதம், இயற்பியல், வேதியியல், முதலிய பாடப்பிரிவுகள் தனியொரு துறையாக உருவாக்கம் பெறும் முன்னரே தமிழ் மொழிப் பாடமும் தலை நிமிர்ந்து நின்றது கல்லூரியின் பெரும்பேறுகளுள் ஒன்று. சாமானிய மக்களிடையே அசாதாரண திறன்களை வளர்ப்பது தனிக்கலை. ஆகவே செந்தமிழ்மொழி வாயிலாக உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் புகட்டிய இக்கல்லூரி ஆல்போல் தன் கிளைகளை பரப்பி விரித்து நின்றது. தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சி நிலைபெற்ற பின்னர் அதுகாறும் பகுதி-2ல் இடம் பெற்றிருந்த தமிழ்மொழிப் பாடம் பேரா. திரு மாயாண்டி பாரதி அவர்கள் தமிழத்துறைத் தலைவராக இருந்த காலத்திலான 1971-1972ஆம் கல்வியாண்டு முதல் பகுதி-1ல் தமிழ்மொழி இடம் பெறலாயிற்று. கண்களையும் இதயத்தையும் விட்டு அகல மறுக்கும் அழகிய இயற்கை வளத்தாலும், தென்றல் நீங்காத மெல்லிய மழைச்சாரலாலும், பக்திப் பெருக்காலும் ‘திக்கெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி’ என ஞானசம்பந்தரால் குறிப்பிடப்படும் இப்பகுதியில் உள்ள கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்களின் அறியாமையை அகற்றி அறிவொளி வீசவந்த இக்கல்லூரியில் தமிழ்மொழியுடன் பிற பாடப்பிரிவுகளிலும் கற்று தேறினர்.

ஆலவிழுதுகள் போல கல்லூரியின் தூண்களுள் ஒன்றாக திகழும் தமிழ்த்துறை துறைகள்தோறும் தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. தமிழ் வாழ்க!

Courses

UNDER CONSTRUCTION

Syllabus

UNDER CONSTRUCTION

POS

UNDER CONSTRUCTION

Faculty

E-Content

Events


MUTA – Competitions & Prizes

MUTA - Competitions Conducted and Prizes Distributed ...
Read More

Dr. C YESU

×
Mrs. T. SUJA GETHSY

×
Dr (Mrs) K JOSELINE MARGARET

×
Dr.(Mrs) I J HELENA GRACELIN

×
Mr J KINGSLY EBENEZER JEBASELVAN

×
அகப்பொருள்

Insert your error message here, if the PDF cannot be displayed.

×
ஆகுபெயர்

Insert your error message here, if the PDF cannot be displayed.

×
கருப்பொருள்

Insert your error message here, if the PDF cannot be displayed.

×
குறுந்தொகை

Insert your error message here, if the PDF cannot be displayed.

×